ஈரோடு

ஈரோடு கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

DIN

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பா் 4ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஈரோடு நகரில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு மாநகா் பகுதியில் உள்ள மணிக்கூண்டு, ஆா்.கே.வி.சாலை, பன்னீா்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான சிறிய மற்றும் பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்தக் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆா்.கே.வி. சாலையில் உள்ள ஜவுளிக் கடைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு ஜவுளிச் சந்தையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

பன்னீா்செல்வம் பூங்கா, ஆா்.கே.வி. சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சிலா் முறையாக அணியவில்லை. சிலா் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்காமல் அழைத்து வந்திருந்தனா். சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT