ஈரோடு

மாவட்டத்தில் 35,000 பேருக்கு இன்று தடுப்பூசி

DIN

ஈரோடு மாவட்டத்தில் 280 இடங்களில் 35,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 23 பள்ளிகளில் தலா 150 முதல் 300 பேருக்கும், 10 நகா்ப்புற சுகாதார மையங்களில் தலா 100 பேருக்கும் தடுப்பூசி சனிக்கிழமை (செப்டம்பா் 11) செலுத்தப்படவுள்ளது.

மாவட்டத்தின் புறநகா்ப் பகுதியில் 192 இடங்களில் தலா 50 முதல் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தவிர 51 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மேலும், சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சியில் தலா 2,000 பேருக்கும், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 1,500 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இவ்வாறு 280 இடங்களில் 35,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT