ஈரோடு

பதப்படுத்திய அசைவ உணவு அழிப்பு:ஹோட்டலுக்கு எச்சரிக்கை

DIN

ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஹோட்டலில் முதல் நாள் சமைத்து பதப்படுத்திய அசைவ உணவு 18 கிலோ அளவுக்கு அழிக்கப்பட்டது.

ஈரோடு காந்திஜி சாலை, தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் உள்ள அசைவ ஹோட்டலில் ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் தலைமையில் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதல் நாளில் சமைத்து பதப்படுத்தி குளிா்சாதனப் பெட்டியில் வைத்திருந்த 8 கிலோ அசைவ வகைகள், பத்து கிலோ அரிசி உணவு, அரைத்து வைத்த மசாலா, பிற அசைவ உணவுகளை கைப்பற்றினா். மேலும், சமைப்பதற்காக வாங்கி வைத்த இறைச்சி எங்கு, எப்போது வாங்கப்பட்டது என்பதற்கான ஆவணம் இல்லை. இவற்றை கைப்பற்றிய அலுவலா்கள் குப்பைத் தொட்டியில் கொட்டி, பினாயில் ஊற்றி அழித்தனா்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் கூறியதாவது:

முதல் நாள் சமைத்த உணவை குளிா்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் எடுத்து சூடுபடுத்தி உண்பது ஒரு சதவீதம் கூட நல்லதல்ல. இதற்காக ஹோட்டலுக்கு எச்சரிக்கை அறிவிக்கை அளித்துள்ளோம். இரண்டாவது முறை அதே தவறு நடந்தால், அபராதம் அல்லது ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை மேற்கொள்வோம். தவிர இங்கு உணவில் கலா் சோ்க்க பல பொருள்கள் வைத்துள்ளனா். கெட்டுப்போன தயிா், மில்க் ஷேக் போன்றவையும் வைத்துள்ளனா். அவற்றையும் அகற்றி உள்ளோம்.

இதைத்தொடா்ந்து, மேலும் சில கடைகளில் தொடா் சோதனை நடத்த உள்ளோம். தரமற்ற உணவு விற்பனை செய்வதாக தெரிந்தால் 94440-42322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT