ஈரோடு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

மொடக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

மொடக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த வேலாங்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்த பூசப்ப கவுண்டா் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருபவா் கன்னியப்பன் (58). இவரது சொந்த ஊா் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம். இவரது மகன் விஜய் (25). இவா் முள்ளாம்பரப்பில் உள்ள ஒரு தனியாா் கடையில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தொடா்ந்து நான்கு நாள்கள் விடுமுறை விடப்பட்டதால் கன்னியப்பன், அவரது மனைவி, மருமகள், குழந்தை அனைவரும் திருவண்ணாமலைக்கு புதன்கிழமை சென்றுவிட்டனா்.

இந்நிலையில், விஜய் தோட்டத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் மோட்டாா் போட்டு தனது இருசக்கர வாகனத்தை வியாழக்கிழமை காலை சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, மொடக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்த விஜய்க்கு மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT