ஈரோடு

பெருந்துறையில் ரூ.1.91 கோடிக்கு கொப்பரை ஏலம்

DIN

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1.91 கோடிக்கு கொப்பரை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,802 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 2,35,000 கிலோ.

இதில், முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக ரூ. 85.59க்கும், குறைந்தபட்சமாக ரூ.80.15க்கும் விற்பனையாயின.

இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக ரூ.83. 93க்கும், குறைந்தபட்சமாக ரூ.64.10க்கும் விற்பனையாயின.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1. 91 கோடி. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையில் விளம்பரப் பதாகை சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

புத்தம் புது காலை! ஸ்ருஷ்டி..

பாக்கியலட்சுமி வில்லி! ரேஷ்மா..

ஊஞ்சலில்.. நிகிதா தத்தா!

அற்புத விளக்கு! அஹானா கிருஷ்ணா..

SCROLL FOR NEXT