ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

DIN

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

பவானிசாகா் அணையில் வழக்கமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 102 அடியாக இருப்பதால் முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி தண்ணீரை திறந்துவைக்கின்றனா். முதல் போக நன் செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT