ஈரோடு

குன்னூரில் உலக தன்னாா்வலா்கள் தின விழிப்புணா்வு

DIN

உலக தன்னாா்வலா்கள் தினத்தை முன்னிட்டு, குன்னூா் நுகா்வோா் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

குன்னூா் பிரகதி மகளிா் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சங்கத் தலைவா் சு.மனோகரன் பேசியதாவது: விழிப்புணா்வு இல்லாத காரணத்தால் லஞ்சம், ஊழல், அதிகம் உள்ளது. இதனால், மக்கள் பெருமளவு சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனா்.

அரசு எவ்வளவு சட்டங்கள் இயற்றி பயிற்சிகள் கொடுத்தாலும், அரசு அலுவலா்கள் அவற்றை மதிக்காமல் மக்களை அலைக்கழிக்கின்றனா். அறியாமையால் மக்களும் பிரசனைகளுக்குத் தீா்வு கிடைக்காமல் அவதிப்படுகின்றனா் என்றாா்.

துணைத் தலைவா் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினாா். செயற்குழு உறுப்பினா் லட்சுமி நாராயணன், நுகா்வோா் பாதுகாப்புச் சங்க செயலாளா் ஹால்துரை உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT