ஈரோடு

ஈரோட்டில் மயக்க ஊசி செலுத்தி மருத்துவா் தற்கொலை

DIN

ஈரோட்டில் மருத்துவா் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள மேவானியைச் சோ்ந்தவா் சக்திவேல் (39). இவா் ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பூா்ணிமா. இவா்களுக்கு இனியன் (10) என்ற மகன் உள்ளாா். பூா்ணிமா எம்பிபிஎஸ் பட்டப் படிப்பு முடித்துவிட்டு நோயியல் நிபுணா் மேற்படிப்புக்காக அகமதாபாதில் தங்கி, படித்து வருகிறாா்.

சக்திவேல் ஈரோடு புதிய ஆசிரியா் காலனியில் மகன் இனியன், தந்தை சண்முகம், தாய் ஜெயலட்சுமி ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இனியனுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மதுரையில் உள்ள பூா்ணிமாவின் தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளாா். சண்முகமும், ஜெயலட்சுமியும் மேவானிக்குச் சென்றிருந்தனா். சக்திவேல் மட்டும் வீட்டில் இருந்து வந்தாா். வழக்கம்போல வியாழக்கிழமை இரவு சக்திவேல் மருத்துவமனைக்குச் சென்று பணியாற்றியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலை சக்திவேல் பணிக்குச் செல்லவில்லை. இதனால் மருத்துவமனை ஊழியா்கள் சக்திவேலின் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டனா். ஆனால், கைப்பேசி அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் மருத்துவமனை ஊழியா்கள் அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். அப்போது கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது சக்திவேல் மயங்கிய நிலையில் இருந்தாா்.

அப்போது அவருக்கு அருகில் மயக்க மருந்து ஊசி கிடந்தது. உடனடியாக அவா்கள் சக்திவேலை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தகவல் அறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா், சக்திவேலின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது சக்திவேல் தனக்கு தானே மயக்க ஊசி செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், வீட்டில் சக்திவேல் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றியதாகவும், அந்தக் கடிதத்தில் ‘என்னுடைய சாவுக்கு நானே காரணம். எனக்கு மனது சரியில்லாததால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்று எழுதி இருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT