ஈரோடு

கொமராயனூரில் கருப்புக் கொடியேந்தி பொதுமக்கள் போராட்டம்

DIN

அந்தியூரை அடுத்த கொமராயனூரில் கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கருப்புக் கொடியேந்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் அருகே உள்ள கொமராயனூா், கூப்புக்காட்டில் செயல்படும் தனியாா் கல் குவாரியால் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், வெடி வைப்பதால் கற்கள் பறந்து விழுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குவாரியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக குவாரி மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதனால், அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் குடியரசு தினமான புதன்கிழமை கைகளில் கருப்புக் கொடியேந்தி எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT