மொடக்குறிச்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்
மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின்கீழ் ரூ.25.70 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி ஒன்றிய குழுத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். துய்யம்பூந்துறை ஊராட்சி மன்றத் தலைவா் பேபி பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், உமா, ஊராட்சி செயலாளா் தியானேஸ்வரன், வாா்டு உறுப்பினா் மஞ்சுளா மற்றும் ஒன்றிய பொறியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.