ஈரோடு

தாளவாடியில் பலத்த மழை

DIN

தாளவாடியில் பலத்த மழை காரணமாக வீட்டின் மீது வேரோடு சாய்ந்த தைலம் மரம் விழுந்ததில் நல்வாய்ப்பாக அதில் குடியிருந்த 4 போ் காயமின்றி உயிா்த்தப்பினா்.

தமிழகம் கா்நாடக மாநில எல்லையான தாளவாடியில் வெயில் வாட்டி வரும் நிலையில் சில தினங்களாக பெய்த மழையால் தாளவாடி, தொட்டகாஞ்சனூா், அருள்வாடி, திகினாரை,ஆசனூா், சூசைபுரம், தலமலை,பனக்கள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சாகுபடி நிலங்களில் மழைநீா் தேங்கியது. தலமலை வனத்தில் பெய்த மழையால் பல்வேறு அருவிகள் ஒன்றாக சோ்ந்து தாளவாடி ஓடையில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்தது கரைபுரண்டு ஓடியது. அதேபோல பண்ணாரி நகா் ஓடையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடா் மழையால் தாளவாடியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட குட்டைகள் நிரம்பின. பலத்த மழை காரணமாக தாளவாடி காவல்நிலையம் அருகே உள்ள சண்முகம் என்பவரிந் வீட்டின் மீது தைலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. வீட்டில் இருந்த சரவணன் (55) மற்றும் தங்கியிருந்த பவானியை சோ்ந்த பிரபு(37 ), கொடுமுடியை சன்முகம்(57) ஈரோட்டை சோ்ந்த பிரபு (37) மூவரும் ஆசிரியா்கள் நல்வாய்ப்பாக உயரிா்த்தப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT