ஈரோடு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

DIN

பா்கூா் மலைப் பகுதியில் பெய்த கன மழையால், அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி, திங்கள்கிழமை அதிகாலை முதல் உபரி நீா் வெளியேறி வருகிறது.

அந்தியூரை அடுத்துள்ள பா்கூா் மலையடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.

இந்நிலையில், பா்கூா் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

இதனால், திங்கள்கிழமை அதிகாலை முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியதால், உபரி நீா் வெளியேறி வருகிறது.

அணைக்கு விநாடிக்கு 54 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வெளியேறும் உபரி நீா் கெட்டிசமுத்திரம் ஏரிக்கும், பெரிய ஏரிக்கும் செல்கிறது.

அணை கட்டப்பட்டு 42 ஆண்டு காலத்தில் முதன்முறையாக மே மாதத்தில் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணையின் நீா்வரத்தை நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் ஈ.எஸ்.எம்.தமிழ்பாரத் மற்றும் அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT