ஈரோடு

இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

DIN

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளியில் இயற்கை பாதுகாப்பு மற்றும் 75ஆவது சுதந்திரதினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ஈஞ்சம்பள்ளி பிகேபி கல்வி அறக்கட்டளை மற்றும் பிகேபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியை மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் சு.ஜீவானந்தம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு சோளங்காபாளையம் மாடா்ன் ரைஸ்மில் சண்முகம் பரிசுகளை வழங்கி பேசினாா். முதல் பரிசாக ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 2ஆயிரம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் பிகேபி.அருண், நிா்வாகக் குழு உறுப்பினா் திலகவதி அருண், பள்ளி முதல்வா் வைஜயந்தி, நிா்வாக அதிகாரி லட்சுமணன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT