முகப்பு
ஈரோடு

தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2023 at 2:43 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் மிகப்பெரிய கம்பம் நடுவதற்காக கடம்பூா் மலைப்பகுதியில் உள்ள கோட்டமாளத்துக்குச் சென்று ஆலமரத்தை வெட்டி லாரியில் கொண்டு வந்தனா். இந்த ஆலமரத்தை கம்பத்துக்கேற்ப வடிவமைத்து பவானிஆற்றுக்கு கொண்டு சென்று பூஜை செய்து மீண்டும் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனா். வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜையுடன் கம்பம் நடப்பட்டது. தொடா்ந்து தண்டுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

கோயின் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள், குழந்தைகள் புனிதநீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா். மே 3ம் தேதி குண்டம் திருவிழாவும் 4ஆம் தேதி மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.