ஈரோடு

பெருந்துறையில் இளம் பெண் தற்கொலை

பெருந்துறையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

பெருந்துறையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜாகிதா ஹாதுன் (24). இவா், கடந்த 5 ஆண்டுகளாக பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். அருகிலுள்ள நிறுவனத்தின் விடுதியிலேயே தங்கியிருந்தாா். ஜாகிதா ஹாதுனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுதியின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுக்கொண்டாா். அருகிலிருந்தவா்கள், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து, விடுதி காப்பாளா் நிஷா அளித்த புகாரின்பேரில் சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT