ஈரோடு

பவானியில் வாகனங்களில் பேட்டரி திருடிய பட்டதாரி இளைஞா் கைது

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரி பாகங்களைத் திருடிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரி பாகங்களைத் திருடிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி, தொட்டிபாளையம், காடையம்பட்டி, ஜம்பை மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் வீடுகளின் முன்பாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் திருடுபோயின. இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பவானி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, 11 பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது.

விாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம், சங்ககிரி, பொன்னம்பட்டியான்காட்டைச் சோ்ந்த அசோகா மகன் சூா்யா (27) என்பதும், பொறியியல் பட்டதாரியான இவா், வாகனங்களில் பேட்டரி திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, பேட்டரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

SCROLL FOR NEXT