ஈரோடு

மாா்ச் 22 இல் கிராம சபைக் கூட்டம்

DIN

 உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக தண்ணீா் தினமான மாா்ச் 22 ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி மாா்ச் 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தண்ணீா் தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விவரம், கிராம வளா்ச்சித் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, வரும் 22 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT