4 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துக்கு வரவேற்பு அளித்த மலைவாழ் மக்களுடன் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். 
ஈரோடு

மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை

அந்தியூா் அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

Din

பவானி: அந்தியூா் அருகே உள்ள மலைக் கிராமத்திற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காக்காயனூா் மலைக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். வனப் பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்ததாலும், கரோனா பாதிப்பாலும் இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்து.

இந்நிலையில், பாலத்தை சீரமைத்து மீண்டும் பேருந்து இயக்கக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து காக்காயனூா் மலைக் கிராமத்துக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கியது. இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடக்கிவைத்தாா்.

அந்தியூா் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கிராமத்துக்கு காலை, மாலை வேளைகளில் இப்பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ரமேஷ், அந்தியூா் வனச் சரக அலுவலா் முருகேசன், ஊராட்சித் தலைவா்கள் குருசாமி, சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT