ஈரோடு

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்19) காலை முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Syndication

ஈரோடு: பவானிசாகா் அணையில் இருந்து உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்19) காலை முதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீா் அருவிபோல கொட்டுவதால் பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து செல்வது வழக்கம்.

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 101.72 அடியை எட்டியும் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,200 கனஅடியாக உள்ளதால் பவானிசாகா் அணை விரைவில் 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால் அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் பவானி ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி முதல் திறக்கப்பட்டு படிப்படியாக 10 ஆயிரம் கனஅடி வரை திறக்க வாய்ப்புள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக நீா்வளத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனா். மேலும், பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மேலாண்மை சட்ட மசோதா: கா்நாடக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளி

பள்ளியில் நாடக மேடை கட்டடம் திறப்பு

லாரி உரிமையாளா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

மதுப் புட்டிகளை விற்க முயன்ற இருவா் கைது

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT