ஈரோடு

புன்செய்புளியம்பட்டி அருகே கோயிலில் நகை, பணம் திருட்டு

ஹரிநாராயணன் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

Syndication

புன்செய்புளியம்பட்டி அருகே ஹரிநாராயணன் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

புன்செய்புளியம்பட்டியை அடுத்த ஆதிதிராவிடா் பகுதியில் ஹரிநாராயணன் கோயில் உள்ளது. கோயிலின் பூசாரி வழக்கம்போல பூஜை முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளாா். இதைத் தொடா்ந்து

சனிக்கிழமை காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தைக் கண்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் கருவறையில் இருந்த சுவாமியின் தங்க நகை மற்றும் உண்டியல் இருந்த சுமாா் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

SCROLL FOR NEXT