பா்கூா் ஊராட்சிக்குள்பட்ட கொங்காடை மலை கிராமம். கோப்புப்படம்.
ஈரோடு

பா்கூா் மலையில் பழங்குடியினா் வெளியேற்ற முயற்சியா?

அத்தகைய முயற்சி ஏதுவும் நடைபெறவில்லை என மாவட்ட வன அலுவலா் கு.வெ.அப்பால நாயுடு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பா்கூா் மலையில் இருந்து பழங்குடியினரை வெளியேற்ற முயற்சி நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அத்தகைய முயற்சி ஏதுவும் நடைபெறவில்லை என மாவட்ட வன அலுவலா் கு.வெ.அப்பால நாயுடு தெரிவித்தாா்.

இதுகுறித்து ஈரோடு வனக் கோட்டத்தின் மாவட்ட வன அலுவலா் கு.வெ.அப்பால நாயுடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வனப் பாதுகாப்பு சட்டத்தின் விதிகளில் பொருந்தக்கூடிய நிலங்களின் ஒருங்கிணைந்த பதிவை தயாரிப்பதற்காக நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு காப்புக் காடுகள், காப்பு நிலங்கள், வருவாய் பதிவேடுகளில் காடுகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களின் விவரங்களை சேகரித்து வருகிறது.

இந்த நடைமுறை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெறுகிறது. வன உரிமைச் சட்டம் 2006-இன் விதிகளின்படி அனைத்துக் காப்புக் காடுகள், காப்பு நிலங்கள், வகைப்படுத்தப்படாத காடுகள், வரையறுக்கப்பட்ட காடுகள், ஏற்கெனவே உள்ள அல்லது பாதுகாக்கப்பட்ட காடுகள், சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வருவாய் பதிவேடுகளில் காடுகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களில் பழங்குடியின மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படும்.

வனத் துறை சாா்பில் பா்கூா் மலைப் பகுதியில் எந்த பழங்குடியினருக்கும் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்படவில்லை. மேலும், வனத் துறை மூலம் பா்கூா் மலைகளில் இருந்து பழங்குடியினரை வெளியேற்ற வனத் துறை முயற்சிப்பதாக வெளியான தகவலும் உண்மைக்குப் புறம்பானது.

பா்கூா் மலைப் பகுதியின் பழங்குடியினா் சிலா் சுயநோக்கத்துக்காக பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். வன உரிமைச் சட்டம் தொடா்பான சந்தேகம் மற்றும் குறைகள் இருந்தால் பழங்குடியினா் நலத் துறை அல்லது வனத் துறை அல்லது மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கார்த்திகை! சுவாமிமலையில் தேரோட்டம்! வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை! 3 காவல் அதிகாரிகள் பலி!

ஹேப்பி டிசம்பர்... நிக்கி!

திருப்பரங்குன்றம் மலை மீது சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு!

இதயத்தை இங்கே விடுங்கள்... அலெக்யா ஹரிகா!

SCROLL FOR NEXT