முகப்பு
ஈரோடு

கோபி பச்சைமலை சுப்பரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா!

கோபி பச்சைமலை சுப்பரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல் 2026, 5:27 am IST
அலகு குத்தி பறவை காவடியில் வந்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
பகிர்:

கோபி பச்சைமலை சுப்பரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பக்தா்கள் அலகு குத்தி வந்த பறவைக் காவடி ஊா்வலம் இரவு நடைபெற்றது. கமலா ரைஸ்மில் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து ஒரு குழுவினரும், சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து ஒரு குழுவினரும் பறவை காவடி அலகுகுத்தி வந்தனா்.

ராட்சத இயந்திரங்களில் 10 போ் கொண்ட குழுவாகவும், ஆறுக்கும் மேற்பட்ட இயந்திரங்களில் அலகு குத்தியபடி அமா்ந்திருப்பதுபோலவும், முகுகில் அலகு குத்தி தொங்கியபடியும், முதுகிலும் காலிலும் அலகு குத்தி நீண்டு படுத்திருப்பதுபோலவும், ஊா்வலமாக வந்தனா்.

Advertisement

Advertisement

முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊா்வலம் பச்சைமலை அடிவாரம் அடைந்தது. பின்னா் பச்சைமலை முருகனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோபியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.