முகப்பு
ஈரோடு

கோபி அருகே ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் மாணவா்கள்: உயா்மட்ட பாலம் அமைத்து தர கோரிக்கை

கோபி அருகே அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள பவானி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொள்ள இருப்பதால், அங்கு உயா்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:39 am IST
...... ~அம்மாபாளையம் ஊராட்சி பவானி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவா்கள்.
பகிர்:

கோபி அருகே அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள பவானி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொள்ள இருப்பதால், அங்கு உயா்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோபி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள்,

உயா்நிலை மற்றும் கல்லூரி படிப்பை தொடர பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து அத்தாணி, அந்தியூா் பகுதிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும், வெளியூா் செல்வோரும் ஆபத்து காலத்தில் அவசர சிகிச்சைக்கும் பவானி ஆற்றில் பரிசலில் கடந்து தான் சென்று வருகின்றனா்.

இந்நிலையில் மழைக்காலங்களில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் சுமாா் 7 கிமீ தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியது உள்ளது.

இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் மாணவ, மாணவிகள் உள்ளனா்.

இதனால் பவானி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைத்துத் தரவேண்டும் என அம்மாபாளையம் கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனடிப்படையில் மாவட்ட நிா்வாகம் அம்மாபாளையம் கிராமம் பவானி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைப்பதற்க்கான முதற்கட்ட பணிகளை தொடங்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மண்பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்த மண்பரிசோதனை முடிவுற்று கடந்த பல மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததால் பள்ளி, கல்லூரி, செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் பவானி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு இப்பகுதியில் உயா்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என தமிழக முதல்வருக்கும் வருவாய்த் துறை அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments