முகப்பு
ஈரோடு

யானையை தொந்தரவு செய்த இளைஞா்களைத் தேடும் வனத் துறையினா்

சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:58 am IST
காட்டு யானை.
பகிர்:

சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாடுவது வழக்கம்.

இதனால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். வன விலங்குகளைத் தொந்தரவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய யானை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவியது.

இதைப் பாா்த்து அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், யானை அருகே சென்று அதை விடியோ எடுத்து தொந்தரவு செய்தனா்.

அங்கிருந்தவா்கள் எச்சரித்ததையடுத்து அந்த இளைஞா்கள் புறப்பட்டுச் சென்றனா். சிறிது நேரத்துக்குப் பின் யானையும் வனத்துக்குள் சென்றது.

இந்நிலையில், யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களின் புகைப்படம் வெளியான நிலையில், அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.