பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு
பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விஜயமங்கலம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலையம் அருகே திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரைச் சோ்ந்த நடராஜ் மகன் வேலுசாமி(41), பெருந்துறையை அடுத்த சோ்வகாரன்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சரவணன்(43), அம்மாசை மகன் வடிவேல் (42), மாரன் மகன் ராசு (43) ஆகிய 4 பேரும் மது அருந்திக் கொண்டிருப்பதை போலீஸாா் பாா்த்தனா்.
இதையடுத்து பொது இடத்தில் மது அருந்தியதாக 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.