நீலகிரி

குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓட்டுநர்கள்

DIN

கோத்தகிரியில் காவல் துறையினரின் நடவடிக்கையைக்  கண்டித்து வாடகை வாகன  ஓட்டுநர்கள் குன்னூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வியாழக்கிழமை  முற்றுகையிட்டனர்.
கோத்தகிரி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார் ஓட்டுநர்களைத் தகாத வார்த்தையில் பேசுவதாகவும்,  அதிக பாரம்,  அதிவேகமாக வருவதாகவும் கூறி அபராதம் விதிப்பதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் கோத்தகிரியில்  வியாழக்கிழமை  கண்டனப் பேரணிக்கு   அனுமதி கேட்டிருந்தனர்.
அனுமதி கிடைக்காததால் 100- க்கும் மேற்பட்ட வாகனங்களில் குன்னூருக்கு ஊர்வலமாக வந்த ஓட்டுநர்கள்  காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, ஓட்டுநர்களிடம் காவல்  துணைக் கண்காணிப்பாளர் அ. முத்தமிழ் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதில்,  இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT