நீலகிரி

பெண்களுக்குப் பாலியல் தொல்லை: விசாரிக்க நீலகிரியில் தனிப்படை

DIN

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது: 
பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின்படி,  புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் புகார் குழு அமைக்க வேண்டும். அதன் விவரத்தையும்,  10 நபர்களுக்குள் பணிபுரியும் அலுவலகங்களில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் செயல்படும் உள்ளூர் புகார் குழுவுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, உதகையில் பிங்கர்போஸ்டிலுள்ள  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்  என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT