நீலகிரி

மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: ஆதிவாசி கிராமங்களில் நக்ஸல் தடுப்பு போலீஸார் ரோந்து

DIN

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து குன்னூர் அருகே உள்ள ஆதிவாசிக் கிராமங்களில் நக்ஸல் தடுப்பு போலீஸார் தீவிர ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.     
கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதையடுத்து, அதன் எல்லைப்பகுதியான கூடலூர், மஞ்சூர், முள்ளி ஆகிய பகுதிகளில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின்பேரில், காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நக்ஸல் தடுப்பு போலீஸார், குன்னூர் அருகேயுள்ள லேம்ஸ் ராக், கரன்சி வழியாக கோழிக்கரை ஆதிவாசிகள் கிராமத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நீலகிரியின் முகப்பு வாயிலான பர்லியாறு வந்த இந்த வீரர்கள், புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் நக்ஸல் தடுப்புப் பிரிவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்களைக் கேட்டுக் கொண்டனர். மேலும், வனப் பகுதி வழியாக பழக்கமில்லாத நபர்கள் வந்து  உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை  கேட்டால் கொடுக்க கூடாதென்றும், ஆதிவாசி மக்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த திடீர் சோதனையால் ஆதிவாசி கிராமங்களில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT