நீலகிரி

பழங்குடியின குழந்தைகளுக்கு காவல் துறை சார்பில் உதவி

DIN

கூடலூர் அருகே மூன்று மாநிலங்களின் வன எல்லையிலுள்ள பழங்குடி கிராமக் குழந்தைகளுக்கு காவல் துறை சார்பில் வியாழக்கிழமை பல்வேறு  உதவிகள் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா உத்தரவின்பேரில் காவல் துறை சார்பில் வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலன் வனப் பகுதிகள் இணையும் இடத்தில் உள்ள கூவக்கொல்லி பழங்குடி கிராமத்தில் 
இந்த ஆண்டு பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தைகளுக்கு புத்தகப் பை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மசினகுடி தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் விஜயன் தலைமை வகித்து குழந்தைகளுக்கு பொருள்களை வழங்கினார். நக்ஸல் தடுப்புப் பிரிவு காவலர் மகேஷ், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT