நீலகிரி

வெளிமாநில வாகனங்களைக் கண்காணிக்க எல்லையில் கேமரா பொருத்தும் காவல் துறை

DIN


கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களைக் கண்காணிக்க தமிழக எல்லைகளில் கேமராக்கள் பொருத்தும் பணி காவல் துறை சார்பில் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கேரள மாநிலத்தின் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களின் 5 எல்லைகள், கர்நாடக மாநிலத்தின் ஒரு எல்லை என மொத்தம் ஆறு எல்லைகள் உள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் எல்லையைக் கடந்து சென்றுவிடுகின்றனர்.
மூன்று மாநில எல்லையில் கூடலூர் உள்ளதால் வெளி மாநிலங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த வாகனங்களைக் கண்காணிக்க எல்லைகளில் அதி நவீன கேமராக்களைப் பொருத்தி சென்சார் மூலம் கண்காணிக்க காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT