நீலகிரி

கோத்தகிரியில் காளான் விளைச்சல் அதிகரிப்பு: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

DIN

கோத்தகிரியில் காளான் சாகுபடி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சிறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக நீர் ஆதாரம் உள்ள விளைநிலங்களில் மலைக்காய்கறிகள், கொய்மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.  வன விலங்குகளின் இடையூறு, தண்ணீர்த் தட்டுப்பாடு,  விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு பாதிப்புகள் அடிக்கடி நிகழ்வதாலும்,  கூடுதல் முதலீடு தேவைப்படுவதாலும், மலைக்காய்கறிகள், கொய்மலர் சாகுபடி அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.
இதற்கு மாற்றாக,  வீட்டின் அருகிலுள்ள சிறிய நிலங்களில் விவசாயிகள் காளான் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கோத்தகிரி பகுதியைப் பொருத்த மட்டிலும், கெட்டிக்கம்பை,  ஒரசோலை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான பரப்பளவில் குடில்கள் அமைத்து காளான் சாகுபடி செய்யப்படுகிறது. 
மேலும் பல விவசாயிகள் குடிசைத் தொழிலாக காளான் வளர்ப்பை மேற்கொண்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மொட்டுக் காளான்,  அசைவ உணவுக்கு இணையான சுவையுடன் இருப்பதால், அதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. 
திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் அசைவ உணவுக்கு மாற்றாக காளான் சமைக்கப்படுவதால் இதற்கு முகூர்த்தக்  காலங்களில் கிராக்கி ஏற்படும். இங்கு விளைவிக்கப்படும் மொட்டுக் காளானுக்கு சுவை அதிகம். இதனால் சமவெளிப் பகுதிகளுக்கு அதிகம் கொண்டு செல்லப்படுகிறது.கோத்தகிரி பகுதியில் இருந்து மட்டும், நாள் ஒன்றுக்கு கோவை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், காய்கறிக் கடைகளுக்கு சுமார் 4,000 கிலோவுக்கு மேல் மொட்டுக் காளான் விற்பனையாகிறது. இதற்காக காளான் பேக்கிங் செய்யப்பட்டு, பேருந்துகள், வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகிறது.
சாதாரண நாள்களில் ஒரு கிலோ காளான் ரூ. 150 முதல் ரூ. 180 வரை விற்பனையாகிறது. விசேஷ நாள்களில்  கிராக்கி ஏற்படும்போது ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
தற்போதைய சீதோஷ்ண நிலையில் மொட்டுக் காளான் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் பேக்கிங் செய்யப்பட்டு காளான் விற்பனையாகிறது. கோத்தகிரி மார்க்கெட்டில் மலைக்காய்கறி விற்பனையைவிட, மொட்டுக் காளான் விற்பனை அதிகரித்துள்ளது.  
எனினும்,  ரூ. 40-45க்கு விற்று வந்த காளான் பாக்கெட்,  விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தற்போது ரூ. 20- 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சிறு விவசாயிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT