நீலகிரி

உதகையில் திருச்சிலுவை மகிமை தினம்

DIN

உதகையில் திருச்சிலுவை மகிமை தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உதகையில் தென்னகத்தின் கல்வாரி என அழைக்கப்படும் குருசடி திருத்தலத்தில் இயேசு பிரான் சுமந்து சென்ற திருச்சிலுவையின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருச்சிலுவை மகிமைப்படுத்தப்பட்ட தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதற்காக உதகை காந்தல் பகுதியிலிருந்து குருசடி திருத்தலம் வரை  திருச்சிலுவை பவனி நடைபெற்றது.
குருசடி திருத்தலத்தில் உதகை மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது .
அருட்தந்தை ஜே.அலெக்சாண்டர், இமானுவேல் ஆகியோருடன் குருசடி திருத்தல அதிபர் அமிர்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில்  19 சிறுவர், சிறுமியருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. 
இதில் பங்கேற்ற 19 குழந்தைகளுக்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அவரது கணவர் ஆகியோர் ஞானத் தாய், தந்தையராக இருந்து புதுநன்மை விழாவை சிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT