நீலகிரி

கூடலூரில் ஆட்சியரை முற்றுகையிட்டு  அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள் வெளிநடப்பு

DIN

கூடலூரில் ஜென்ம நிலம் தொடர்பாக நடைபெற்ற விளக்கமளிக்கும் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
கூடலூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் பிரிவு-17-ன் கீழ் ஜென்ம நிலம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றக் கூட்டத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
அப்போது, அரசியல் கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முரணாக பதிலளித்ததாகக் கூறி கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஆட்சியர் சமரசம் செய்தும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நிலவெளியேற்றம் செய்யும் நடவடிக்கை தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
கூட்டம் நடைபெற்றபோது பாதுகாப்புப் பணியில் போதிய காவல் துறையினர் இல்லாததால் துணைக் கண்காணிப்பாளர் ஜெய் சிங் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT