நீலகிரி

கூடலூர் அருகே யானை தாக்கி விவசாயி சாவு

DIN

கூடலூர் அருகே போஸ்பாறா பகுதியில் திங்கள்கிழமை இரவு யானை தாக்கியதில் விவசாயி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
 நீலகிரி மாவட்டம், கூடலூர் வருவாய் வட்டத்தில் உள்ள முதுமலை ஊராட்சி நாகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வாசு (50). இவர் திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் கூடலூரில் இருந்து அவரது கிராமத்துக்கு வனப் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். 
 முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உள்பட்ட போஸ்பாறா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது யானை அவரை வழிமறித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 நள்ளிரவு வரை வீட்டுக்கு வராத காரணத்தால் வாசுவின் உறவினர்கள் அவரைத் தேடத்  தொடங்கினர். அப்போது, போஸ்பாறா பகுதியில் யானைத் தாக்கி வாசு இறந்துகிடப்பதைப் பார்த்த உறவினர்கள் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
 பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT