நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: உதகை நீதிமன்றத்தில் சயன், மனோஜ் ஆஜராக நோட்டீஸ்

DIN


கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் வரும் 24ஆம் தேதி உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என கருதப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்த பின்னர் எஞ்சிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். 
இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆவணப் படமொன்றில் தில்லியில் தங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் புகாரின் பேரில் இருவரையும் தமிழக போலீஸார் தில்லியில் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. 
ஆனால், இவர்கள் இருவரும் ஊடகங்களுடன் தொடர்பு வைத்துள்ளதோடு, பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வருவதால் இவ்வழக்கில் தொடர்புடைய பிற சாட்சிகள் அச்சப்படுவதாகக் கூறி அவர்கள் இருவரின் ஜாமீனையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நீலகிரி மாவட்ட அரசு வழக்குரைஞர் நந்தகுமார் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனுவின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் சனிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது இவர்களது ஜாமீன் தொடர்வது குறித்து வரும் 24ஆம் தேதி இருவரும் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT