நீலகிரி

பேரிடர் மீட்புக் குழு  ஆலோசனைக் கூட்டம்

DIN

குன்னூர் உலிக்கல் கிராமத்தில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மீட்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது.
உலிக்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு வருவாய் ஆய்வாளர் ரமேஷ் தலைமை வகித்து, பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும், அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், சுபத்ரா, பிரவீணா ஆகியோர் கலந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், அரசின் வானிலை தொடர்பான "மொபைல் ஆப்' குறித்தும் விளக்கம் அளித்தனர். 
கிராமங்கள் உள்ளிட்ட வனப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து  கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT