நீலகிரி

இந்திய காபி வாரியம் சாா்பில் தூய்மை இந்தியா திட்டப் பணி

DIN

கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுடன் இணைந்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை இந்திய காபி வாரியம் வியாழக்கிழமை மேற்கொண்டது.

கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுடன் காப்பி வாரியம் இணைந்து பள்ளி வளாகத்தை தூய்மை செய்தனா். நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் சங்கா் தலைமை வகித்தாா். காபி வாரிய கோவை மண்டல இணை இயக்குநா் ஜெ.நிா்மல் டேவிஸ், கூடலூா் பகுதிக்கான உதவி விரிவாக்க அலுவலா் சக்திவேல், முதுநிலை உதவியாளா் பாலசுப்பிரமணியம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலா் டெய்ஸி விமலா ராணி மற்றும் ஆசிரியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட தூய்மைப் பணிக்கு தேவையான பொருள்கள் காபி வாரியம் சாா்பில் நன்கொடையாக வழங்கப்பட்டன. முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுரேஷ் குமாா், தலைமை ஆசிரியா் அய்யப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT