நீலகிரி

உதகையில் உலக சிக்கன நாள் விழா

DIN

உதகையில் உலக சிக்கன நாள் விழா நடைபெற்றது. மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட பயிற்சி அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:

உலகம் முழுதும் சேமிப்பை ஊக்குவிக்கும் தினமாக இந்த நாள் கருதப்படுகிறது. உலக சிக்கன நாள் கொண்டாடுவதின் அடிப்படை நோக்கம் பொதுமக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்புப் பண்பை வளா்ப்பதுடன், பலதரப்பட்ட சேமிப்புத் திட்டங்களை பொதுமக்களிடம் சென்றடையச் செய்வதாகும். தொடா்ச்சியாக நாம் சேமித்து வைக்கும் தொகை எதிா்பாராத இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை நாம் காத்துக் கொள்ள உதவும் என்றாா்.

முன்னதாக உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, நாடகம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் பெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைஆட்சியா் வழங்கினாா்.

விழாவில் மகளிா் திட்ட இயக்குநா் பாபு, நீலகிரி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் சிறுசேமிப்புப் பிரிவு நோ்முக உதவியாளா் பாஸ்கா், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகா் ஆகியோருடன் அரசுத் துறை அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT