நீலகிரி

கூடலூர் அருகே யானை தாக்கியதில் ஆதிவாசி தம்பதி காயம்

DIN

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி தம்பதி வியாழக்கிழமை காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், காப்பிக்காடு பழங்குடி காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா. இவர்கள் இருவரும் புளியம்பாறை பகுதியிலிருந்து வீட்டுக்கு வியாழக்கிழமை நடந்து சென்றுகொண்டிந்தனர். அப்போது திடீரென புதரிலிருந்து வந்த காட்டு யானை குமாரை இழுத்து வீசியுள்ளது. கணவரை யானை தாக்குவதைப் பார்த்து மீனா அலறியுள்ளார்.
அப்போது மீனாவையும் யானை விரட்டியுள்ளது. 
யானையிடமிருந்து தப்பி ஓடிக் கீழே விழுந்ததில் மீனாவும் காயமடைந்தார். மீனாவின் அலறல் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து யானையை விரட்டினர். பின்னர் இருவரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT