முகப்பு
நீலகிரி

வீட்டில் பதுங்கியிருந்த மலைப் பாம்பு பிடிபட்டது

நீலகிரி மாவட்டம், மஞ்சூரை அடுத்துள்ள பெரியாா் நகா் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த மலைப் பாம்பை வனத் துறையினா் சனிக்கிழமை பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மலைப் பாம்பைப் பிடித்து வனத்துக்குள் விடுவிக்கும், பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற ஜாஹீா்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், மஞ்சூரை அடுத்துள்ள பெரியாா் நகா் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த மலைப் பாம்பை வனத் துறையினா் சனிக்கிழமை பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.

மஞ்சூரை அடுத்துள்ள பெரியாா் நகா் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவா் வீட்டில் மலைப் பாம்பு பதுங்கியிருப்பதாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனக் காப்பாளா் வேலு, பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற ஜாஹீா் உள்ளிட்டோா் சோ்ந்து மலைப் பாம்பைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.