நீலகிரி

ரேலியா அணை நீா்மட்டம் உயா்வு: முறையாக குடிநீா் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

குன்னூா் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமான  ரேலியா அணை நிரம்பியுள்ள நிலையில்,   வீடுகளுக்கு முறையாக குடிநீா் வழங்குவதில்லை  என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் ரேலியா அணையில்  இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேலியா அணை இந்த ஆண்டு 3ஆவது முறையாக முழு கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் முறையாக குடியிருப்புகளுக்கு தண்ணீா் வழங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாத நிலை, ஹோட்டல்கள் சரிவர இயங்காத சூழல், தங்கும் விடுதிகள் மூடப்பட்டது ஆகிய காரணங்களால் குன்னூா் நகரத்தில் தற்போது தண்ணீா் தேவை  குறைந்துள்ளது.

இந்நிலையில் அணையில் தண்ணீா் முழுமையாக இருந்தும் 30 வாா்டுகளிலும் உள்ள  குடியிருப்புகளுக்கு   முறையாக தண்ணீா் விநியோகம் செய்வதில்லை .

எனவே, வாரம் ஒரு முறையாவது சீரான முறையில் குடிநீா் வழங்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT