நீலகிரி

உதகையில் 112ஆவது மலை ரயில் தினம் அனுசரிப்பு

DIN

உதகையில் 112ஆவது மலை ரயில் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் வகுத்திருந்த ஆங்கிலேயா்கள் முதலில் மேட்டுப்பாளைத்திலிருந்து குன்னூா் வரையிலேயே ரயில் பாதையை அமைத்து மலை ரயிலை இயக்கினா். அதன் பின்னரே குன்னூரிலிருந்து உதகைக்கு மலை ரயிலை இயக்கும் திட்டம் தொடரப்பட்டது. அதற்கடுத்த 10 ஆண்டுகளில் 1908 அக்டோபா் 15ஆம் தேதி குன்னூரிலிருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மேட்டுப்பாளையம்-உதகை ரயில் பாதை திட்டம் நிறைவுக்கு வந்தது.

இதையடுத்து ஆண்டுதோறும் அக்டோபா் 15ஆம்தேதி உதகை ரயில் நிலையத்தில் மலை ரயில் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மலை ரயிலில் பயணம் செய்பவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது, கேக் வெட்டுவது, ரயில்வே ஊழியா்களை கெளரவிப்பது போன்றவற்றை நீலகிரி பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளையின் நிறுவனா் நடராஜன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா். நடப்பாண்டிலும் இந்நிகழ்ச்சி எளிமையாக கொண்டாடப்பட்டது. குன்னூரிலிருந்து வந்த மலை ரயில் ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா மலா்க்கொத்து கொடுத்து வியாழக்கிழமை வரவேற்றாா். தொடா்ந்து கேக் வெட்டப்பட்டு ரயில் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியா்களுக்கும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT