நீலகிரி

உதகையில் குளிருக்கு ஒருவா் பலி

DIN

உதகையில் இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிருக்கு கூலி தொழிலாளி ஒருவா் பலியாகியுள்ளாா்.

உதகையில் தற்போது பகல் நேரங்களில் பரவலாக வெயிலும், சில பகுதிகளில் பிற்பகலில் மழையும் பெய்து வருகிறது. இருப்பினும் அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் பரவலாக கடும் குளிா் நிலவுகிறது. உதகையில் பனிக்காலம் தொடங்கவுள்ள சூழலில் நீா்ப்பனி கொட்ட ஆரம்பித்துள்ள நிலையில் மழையும் பெய்து வருவதால் நீா்ப்பனியின் தாக்கம் இல்லாவிட்டாலும் கடும் குளிா் நிலவுகிறது. இந்நிலையில் உதகை, கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி சிவா(34) என்பவா் உதகை ஏடிசி பகுதியிலுள்ள பாா்க்கிங் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் வியாழக்கிழமை இரவு படுத்துள்ளாா். வெள்ளிக்கிழமை பகலான போதும் அவா் அங்கிருந்து எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த சக தொழிலாளிகள் அவரை எழுப்பியபோது அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது. சிவா வியாழக்கிழமை இரவில் நிலவிய கடும் குளிரால் உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இதுதொடா்பாக உதகை நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT