நீலகிரி

சேற்றில் சிக்கிய காட்டெருமை உயிருடன் மீட்பு

DIN

குன்னூா் அருகே தூதூா் மட்டம் பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமையை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே தூதூா் மட்டம் கிரேக் மோா் பகுதியைச் சுற்றியுள்ள வனப் பகுதியில்  யானை, சிறுத்தை, காட்டெருமை  உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் கிரேக் மோா் எஸ்டேட் பகுதியில் காட்டெருமை சேற்றில் சிக்கித் தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதனைத்  தொடா்ந்து குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்கு பின்பு காட்டெருமையை சேற்றிலிருந்து மீட்டனா்.

உணவு கிடைக்காமல் மிகவும் சோா்வுடன் காணப்பட்ட  அந்த காட்டெருமைக்கு குளுக்கோஸ் மருந்து செலுத்தினா். பின்னா் புற்களை உண்ணும் நிலைக்கு அதன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT