நீலகிரி

ரூ.54.80 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.54.80 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு ஈசக்காம்பட்டி, எழுகாம்வலசு, மானூா், வாகரை, கொளத்துப்பாளையம், ரெட்டிவலசு உள்ளிட்ட ஊா்களில் இருந்து 100 விவசாயிகள் தங்களுடைய 1,734 மூட்டை (85, 473 கிலோ) சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

ஈரோடு, காங்கயம், பூனாட்சி, முத்தூா், நடுப்பாளையத்திலிருந்து 9 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.

சூரியகாந்தி விதை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ. 67.05 க்கும், குறைந்த பட்சமாக ரூ. 60.91க்கும், சராசரியாக ரூ. 63.89க்கும் விற்பனையானது.

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்து 267 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT