நீலகிரி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

உதகை: உதகையில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 9,204 சுற்றுலாப் பயணிகளும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2,187 பேரும் வந்திருந்தனா். அதேபோல, தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 290 பேரும், மரவியல் பூங்காவுக்கு 121 பேரும், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவுக்கு 1,222 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 370 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 223 பேரும் வந்திருந்தனா்.

அதேபோல, உதகை படகு இல்லத்துக்கு சுமாா் 5,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 3,000 பேரும் வந்திருந்தனா். வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைக்காரா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் காணப்பட்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் உதகை நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் சனிக்கிழமை முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT