நீலகிரி

199 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழிகள்

DIN

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 199 பயனாளிகளுக்கு இலவச நாட்டுக் கோழிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், கூடலூா் கோட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு புறக்கடை கோழிகள் வழங்கப்பட்டன. அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி ஆகிய பகுதிகளில் ஊரக குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு பெண்களுக்கு 199 குடும்பங்களுக்கு தலா 25 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பந்தலூா் கால்நடை மருத்துவா் எம்.பாலாஜி, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சஜூ, ஆதிவாசிகள் சங்கத் தலைவா் ரகு, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் ஜாஸ்மின், சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT