நீலகிரி

நீலகிரி மாவட்டத்துக்கு 5,400 கரோனா தடுப்பூசிகள்

DIN

நீலகிரி மாவட்டத்துக்கு 5,400 கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளதாகவும், இவை அரசு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா். இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்துக்கு 5,400 கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. இவை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, கேத்தி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குன்னூா் அரசு லாலி மருத்துவமனை ஆகிய மூன்று மையங்களில் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்படும்.

ஒரு மையத்தில் 2 மணி நேரத்துக்கு 25 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT