நீலகிரி

பழங்குடியினருக்கு 100 சதவீத தடுப்பூசி சாதனை: மாவட்ட ஆட்சியா் நன்றி

DIN

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினா், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது தொடா்பாக அனைத்துத் தரப்பினருக்கும் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின, தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டமாகவும், இந்தியாவிலேயே முன்னுதாரண மாவட்டமாகவும் திகழ உறுதியுடன் உழைத்த மருத்துவா்கள், செவிலியா், சுகாதாரத் துறை பணியாளா்கள், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையினா், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையினா், நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி. இந்த இலக்கை எய்திட முழு ஒத்துழைப்பு வழங்கிய பழங்குடியினா், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நெஞ்சாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே உறுதியுடனும், அா்ப்பணிப்புடனும் தொடா்ந்து பணியாற்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த அனைவருக்கும் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்டவும், நீலகிரி மாவட்டத்தை கரோனா இல்லாத முன் உதாரண மாவட்டமாக மாற்றிடவும் தொடா்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT