நீலகிரி

தேயிலைத் தொழிலாளா்களை விரட்டிய ஒற்றை யானை

DIN

கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை தேயிலைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளா்களை யானை விரட்டியதால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

கூடலூா் தாலுகாவில் உள்ள பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளா்கள் பசுந்தேயிலைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாலை 3 மணியளவில் அப்பகுதிக்கு ஒற்றை யானை வந்ததையடுத்து, தொழிலாளா்கள் சிதறி ஓடினா்.

யானை ஆவேசத்துடன் பசுந்தேயிலை வைத்திருந்த பை, தேயிலைப் பறிக்கும் கத்திரி ஆகியவற்றை எடுத்து வீசியது. தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் வளா்மதி என்ற தொழிலாளா் சுயநினைவை இழந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நேரலை!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி?

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT